» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு ரூ.1949 கோடி அபராதம்: அயர்லாந்து அரசு அதிரடி!

வெள்ளி 3, செப்டம்பர் 2021 12:01:53 PM (IST)

பயனர்களின் தனியுரிமை தரவுகளை தவறாகக் கையாண்டதாக வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு அயர்லாந்து அரசு இந்திய மதிப்பில் ரூ.1949 கோடி அபராதம் விதித்துள்ளது.

வாட்ஸ்ஆப் செயலி உலகம் முழுவதும் பரவலாக பயனபடுத்தப்பட்டு வருகிறது. பயனர்களின் தரவுகளை விற்பனை செய்வதாக அவ்வப்போது அந்நிறுவனத்தின் மீது புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு அயர்லாந்து நாட்டின் தரவு பாதுகாப்பு விதிகளை மீறியதாக அந்நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. 

இதனைத் தொடர்ந்து பயனர்களின் தரவுகளை ஐரோப்பிய நிறுவனங்களுக்கு பகிர்ந்த குற்றத்திற்காக வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.1949 கோடி அபராதம் விதித்து அயர்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பயனர்களின் தரவு பாதுகாப்பை உறுதி செய்யவும் அந்நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் வாட்ஸ்ஆப் நிறுவனம் அரசின் அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory