» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானிஸ்தானில் சிக்கி தவிக்கும் 200 அமெரிக்கர்கள் உயிருக்கு ஆபத்து: வெளியுறவு அமைச்சர் அச்சம்!

செவ்வாய் 31, ஆகஸ்ட் 2021 4:36:49 PM (IST)

ஆப்கானிஸ்தானில் சிக்கி தவிக்கும் 200 அமெரிக்கர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் கூறி உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் ஒட்டு மொத்த ராணுவமும் இன்று வெளியேறிவிட்டது. கடைசி நேரத்தில் ஏராளமான வெளிநாட்டினரும், ஆப்கானிஸ்தான் மக்களும் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக விமான நிலையத்திற்கு வந்தனர். ஆனால் அவர்களை அமெரிக்காவால் அழைத்து செல்ல முடியவில்லை.

தற்போது அமெரிக்கர்கள் சிலரே கூட ஆப்கானிஸ்தானில் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களால் உரிய நேரத்தில் விமான நிலையத்திற்கு வர முடியாமல் ஆங்காங்கே மாட்டிக் கொண்டார்கள். அதை மீறி வந்தால் பயங்கரவாதிகள் தாக்கக் கூடும் என பயந்து தாங்கள் இருந்த இடத்திலேயே சிலர் பதுங்கிக் கொண்டனர். இதனால் அவர்களாலும் விமான நிலையத்துக்குவர முடியவில்லை. இவ்வாறு 100 முதல் 200 அமெரிக்கர்கள், ஆப்கானிஸ்தானில் சிக்கி இருக்கலாம் என கருதுவதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோனி பிளிங்கன் கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘ஆப்கானிஸ்தானில் சிக்கி உள்ள அமெரிக்கர்களையும், மற்றவர்களையும் தலிபான்கள் பத்திரமாக அனுப்பி வைப்பார்கள் என்று நம்புகிறோம். அவர்களை மீட்பதற்கு உரிய உதவிகளை அமெரிக்கா செய்யும்’’ என்றார். தற்போது ஆப்கானிஸ்தானில் சிக்கி உள்ள 200 அமெரிக்கர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. ஒருவேளை தலிபான்கள் அவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற் கொள்ள வாய்ப்பு உள்ளது. அவ்வாறு இல்லை என்றாலும், ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஐ.எஸ்., அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory