» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பதிலடி: ஆப்கனில் அமெரிக்க ட்ரோன் தாக்குதல்

சனி 28, ஆகஸ்ட் 2021 5:45:43 PM (IST)



பழிக்குப் பழியாக ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா ட்ரோனா தாக்குதலை தொடங்கியுள்ளது. 

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டவா்களையும் தலிபான்களின் அச்சுறுத்தலை எதிா்நோக்கியுள்ளவா்களையும் வெளியேற்றும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐஎஸ்ஐஎஸ்-கே தாக்குதல் நடத்தும் என்று ஏற்கெனவே உளவு அமைப்புகள் எச்சரித்து வந்தன. அதனை உண்மையாக்கும் வகையில், காபூல் விமான நிலையத்தில் வியாழக்கிழமை ஐ.எஸ். பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில், அங்கு சேவையாற்றிக் கொண்டிருந்த 13 அமெரிக்கப் படையினா் உயிரிழந்தனா்; 95க்கும் மேற்பட்ட பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் பலியாகினா்; பலா் காயமடைந்தனா். 

பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில், 13 அமெரிக்கப் படையினா் உயிரிழப்புக்குக் காரணமான பயங்கரவாதிகளை நாங்கள் மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம். குண்டுவெடிப்புக்குக் காரணமானவா்களை வேட்டையாடுவோம். தங்களது குற்றத்துக்கான விலையை அவா்கள் கொடுத்தே ஆக வேண்டும். பயங்கரவாதிகளின் இந்தச் செயலுக்கு அமெரிக்கா அடிபணியாது. எங்களது வெளியேற்றப் பணிகள் திட்டமிட்டபடி தொடரும். அதே நேரம், ஆப்கானிஸ்தானிலுள்ள ஐஎஸ்ஐஎஸ்-கே நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தை வகுக்குமாறு ராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஐ.எஸ். பயங்கரவாதிகளால் ஒருபோதும் வெல்ல முடியாது என ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.  

இந்நிலையில், பழிக்குப் பழி வாங்கும் விதமாக, ஆப்கனில் உள்ள ஐஎஸ்ஐஎஸ்-கே பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்க படையினர் ஆளில்லை ட்ரோன்கள் மூலம் தாக்குதலை தொடங்கியுள்ளனர். அமெரிக்காவின் வான்வழி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ்-கே பயங்கரவாதிகள் அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவூல் விமான நிலையத்தில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறும்படி அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory