» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதக் குழு தாக்குதல்: 70பேர் பலி - ஜோ பைடன் கண்டனம்!

வெள்ளி 27, ஆகஸ்ட் 2021 10:48:33 AM (IST)



காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதக் குழு தாக்குதல் நடத்தியதில் அமெரிக்க வீரர்கள் உட்பட 70பேர் உயிரிழந்தனர். இநட்த சம்பவத்தை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூல் விமான நிலையம் அருகே நேற்று நடத்தப்பட்ட இரு தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க கடற்படை வீரா்கள் 12 போ் உள்பட 72 போ் கொல்லப்பட்டனா்; 140-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதக் குழு இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், காபூல் தாக்குதலை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பயங்கவராதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்களை முழுவதுமாக மீட்போம். எங்களுடைய ஆப்கானிஸ்தான் கூட்டாளிகளையும் அங்கிருந்து வெளியேற்றுவோம். எங்களுடைய மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறும். காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்தை நாங்கள் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். அதற்குப் பதிலாக எங்கள் படைகளுடன் உங்களை வேட்டையாடுவோம். 

காபூல் விமான நிலையத்தில் நடந்த இந்த தாக்குதலில் தலிபான்களுக்கும் இஸ்லாமிய அரசுக்கும் தொடர்பு இருப்பதாக எந்தவித ஆதாரமுமில்லை' என்று தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்த துயரம் இனி ஒருபோதும் நடக்க அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்தார்.  காபூல் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த கடற்படை வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, அமெரிக்கா முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory