» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தான் அணு ஆயுதங்களை தலிபான் கைப்பற்ற வாய்ப்பு: அமெரிக்க எம்பிக்கள் எச்சரிக்கை

வியாழன் 26, ஆகஸ்ட் 2021 12:40:12 PM (IST)

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை தாலிபான்கள் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக அமெரிக்க எம்பிக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

ஆப்கானில் ராணுவ ரீதியாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான்கள் அதன் அண்டை நாடான பாகிஸ்தானை தனது கைப்பொம்மையாக மாற்றி பாகிஸ்தான் வசம் உள்ள அணு ஆயுதங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க எம்பிகள் 68 பேர் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை அமெரிக்க அதிபருக்கு அனுப்பி உள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள இம்ரான் கான் தலைமையிலான அரசை தலிபான்கள் சீர்குலைக்க அமெரிக்க அரசு அனுமதிக்கக் கூடாது என்றும் அமெரிக்க எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர். 20 ஆண்டு காலம் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் ராணுவத்துக்கு திடீரென்று என்ன பிரச்சனை ஏற்பட்டது ஏன் அவசர அவசரமாக அவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற நேர்ந்தது அடுத்த நடவடிக்கைகளுக்கு என்ன திட்டம் அமெரிக்கா வசம் உள்ளது? 

இவை போன்ற முக்கியமான கேள்விகளுக்கெல்லாம் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பதில் தயார் செய்ய வேண்டிய அவசியத்தில் இருக்கிறார். ஆப்கானிஸ்தானில் தலிபான் ராணுவம் தனது எல்லையை கடந்து அருகில் உள்ள சிறிய நாடுகளைக் கைப்பற்ற முன்னேறினார் அதற்கு நமது நட்பு நாடுகளின் இராணுவத்தை பயன்படுத்த அமெரிக்கா திட்டம் ஏதேனும் வைத்து இருக்கிறதா?

ஆப்கானிஸ்தானின் அண்டை நாடு பாகிஸ்தான் இரண்டும் ஒரே எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. பாகிஸ்தானில் உள்ள தலிபான் அமைப்பின் கிளை இம்ரான்கான் அரசுக்கு எதிராக நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பினைப் பயன்படுத்தி பாகிஸ்தான் அரசை சீர்குலைக்க தலிபான் அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு செனட் உறுப்பினர்களான எம்பிக்களும் மக்கள் பிரதிநிதிகள் சபையிலும் அமெரிக்க அதிபருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory