» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தலீபான் தலைவருடன் அமெரிக்க உளவுத்துறை தலைவர் ரகசிய சந்திப்பு

புதன் 25, ஆகஸ்ட் 2021 12:18:15 PM (IST)

அமெரிக்க படைகள் 31-ம் தேதிக்குள் வெளியேற தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தலீபான் தலைவரை அமெரிக்க உளவுத்துறை தலைவர் ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை யடுத்து அந்நாட்டை தலீபான்கள் கைப்பற்றியுள்ளன. மேலும், ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை தலீபான்கள் தீவிரப்படுத்தியுள்ளன. இதற்கிடையில், ஆப்கானிஸ்தானின் சிக்கியுள்ள தங்கள் நாட்டை சேர்ந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த மீட்பு நடவடிக்கைகளுக்காக காபூல் விமான நிலையத்தை அமெரிக்க படையினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளன.  ஒப்பந்தத்தின்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் வெளியேறிவிட வேண்டும் இல்லையே விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள அமெரிக்கர்களை மீட்புபணிகள் கூடுதல் கால அவகாசம் தேவைப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், தலீபான் தலைவர்களில் முக்கிய நபரான முல்லா அப்துல் கானியை அமெரிக்க உளவுத்துறையின் (சிஐஏ) தலைவர் வில்லியம் பர்ன்ஸ் நேரில் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்த ரகசிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் பிறநாட்டு மக்களை வெளியேற்றுவதில் ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு பின்னரும் கால அவகாசத்தை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து உளவுத்துறை தலைவர் வில்லியம் பர்ன்ஸ் தலீபான் தலைவருடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory