» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நியூசிலாந்தில் 6 மாதங்களுக்குப் பிறகு கரோனா: மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு

செவ்வாய் 17, ஆகஸ்ட் 2021 5:52:38 PM (IST)

நியூசிலாந்தில் 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் 3 நாள் ஊரடங்கு அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கடந்த 6 மாதங்களாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்நாட்டின் ஆக்லாந்து பகுதியில் வசித்துவந்த 58 வயதான நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து ஆக்லாந்து மற்றும் கோரமண்டல் பகுதியில் ஒரு வார கால பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 நாள் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory