» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்கள்: காபூல் விமான நிலையத்தில் 6000 அமெரிக்க வீரர்கள்!

திங்கள் 16, ஆகஸ்ட் 2021 12:41:59 PM (IST)



ஆப்கானில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். இதையொட்டி காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் தலைநகரம் காபூலில் என்ன நடக்குமோ? என்ற பதட்டம் நிலவுகிறது. தற்போது பெரும்பாலான பகுதிகள் தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அமெரிக்க படையினர் காபூல் விமான நிலையத்தை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்கள். அங்கிருந்து விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.

விமான நிலையத்தில் மட்டும் அமெரிக்காவை சேர்ந்த 6 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருக்கிறார்கள். அவர்கள் விமான போக்குவரத்துகளையும் கவனித்து வருகிறார்கள். இது சம்பந்தமாக அமெரிக்கா வெளியிட்டுள்ள செய்தியில், "காபூல் விமான நிலையம் முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. அங்கிருந்து வெளியேறுபவர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுத்து வருகிறோம்.

அமெரிக்க வீரர்கள் நாளை முதல் காபூலில் இருந்து வெளியேற தொடங்குவார்கள். ஏற்கனவே காபூலில் இருந்து 2 ஆயிரம் பொதுமக்கள் அமெரிக்கா திரும்பி இருக்கிறார்கள். அமெரிக்க சிறப்பு விசா வைத்திருப்பவர்கள் இதுபோன்று அனுமதிக்கப்படுவார்கள். ஆப்கானிஸ்தானில் எந்தவித ரத்த மோதல்களும் இல்லாமல் அமைதியுடன் எல்லா நடவடிக்கைகளும் இருப்பதற்கு நாங்கள் முயற்சித்து வருகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே அமெரிக்கா உள்ளிட்ட 60 நாடுகள் ஒன்றிணைந்து ஒரு கோரிக்கையை விடுத்துள்ளன. புதிய ஆட்சி நாட்டில் பிரச்சினைகளுக்கு இடம் அளிக்காமல் அதிகாரத்தை செலுத்த வேண்டும், மீண்டும் உள்நாட்டுப்போர் ஏற்படக்கூடாது. நாட்டை விட்டு வெளியேற விரும்புபவர்களை தடுக்காமல் அனுமதிக்க வேண்டும். எந்தவித தாக்குதல்களும் நடத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே காபூலில் இருந்து அமெரிக்க தூதரகம் முற்றிலும் மூடப்பட்டு அமெரிக்க கொடி இறக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory