» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதில் மாற்றமில்லை - ஜோ பைடன் உறுதி

வியாழன் 12, ஆகஸ்ட் 2021 11:28:53 AM (IST)

ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆப்கானில் தலீபான்களுக்கு எதிரான போரில் அந்த நாட்டு ராணுவத்துக்கு அமெரிக்க படைகள் பெரும் பக்கபலமாக இருந்து வந்த நிலையில், தலீபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி செப்டம்பர் 11-ந் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்பப் பெறப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார்.

அதன்படி தற்போது 90 சதவீத அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்டன. எஞ்சிய படைகளும் இந்த மாத இறுதிக்குள் திரும்ப பெறப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த சூழலில் அமெரிக்க படைகளின் வெளியேற்றம் காரணமாக ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் பெருகி வருகிறது. ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை அவர்கள் கைப்பற்றி விட்டனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறும் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் பேசுகையில் ‘‘ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை திரும்ப பெறும் முடிவு குறித்து வருந்தவில்லை. கடந்த 20 ஆண்டுளில் 1 ட்ரில்லியன் டாலர்களை செலவழித்துள்ளோம். ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இழந்துள்ளோம். அதே சமயம் விமானம், உணவு, உபகரணங்கள், ஆப்கான் படைக்கு ஊதியம் ஆகியவற்றை அமெரிக்க தொடர்ந்து வழங்கும் என‌ கூறினார்.


மக்கள் கருத்து

உண்மை ஒருவன்Aug 14, 2021 - 04:34:10 PM | Posted IP 108.1*****

அமெரிக்கா பற்றி குறை கூறும் sekar , ராமநாத என்றும் கோமாளிநாத பூபதி அவர்களுக்கு ஒசாமா பின்லேடனை கொன்றது யாரு ?? காஸ்மீர் பக்கத்தில இருந்தால் இந்தியா ஈசியாக பிடித்து விடலாம், ஆனால் அமெரிக்கா எவ்வளவு தூரத்தில் வந்து தீவிரவாதிகளை போட்டு தள்ளிவிட்டார்கள் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

ராமநாதபூபதிAug 14, 2021 - 10:11:22 AM | Posted IP 162.1*****

அங்கே கொஞ்சம் எண்ணெய் கிணறுகள் இருந்திருந்தால் அங்கே குத்த வைச்சு உக்காந்து இருப்பானுக. ஒன்னும் இல்லாத உன்னை எதுக்கு நான் காவல் காக்கணும்னு இப்போ கிளம்பிட்டானுவ. இதே மாதிரி ஈராக்கை விட்டு கிளம்பட்டும் பார்ப்போம். அங்கே ஆதாயம் இருக்குல்ல

sekarAug 12, 2021 - 02:03:37 PM | Posted IP 162.1*****

அமெரிக்காவுக்கு இது இரண்டாம் வியட்நாம் போர் . இதில் ஒரு பிரஜோனமும் அமெரிக்காவுக்கு கிடைக்கவில்லை அதனால் படை வாபஸ் .தன வினை தன்னை சுடும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory