» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு 12 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம்: அபுதாபி அரசு

புதன் 11, ஆகஸ்ட் 2021 12:42:38 PM (IST)

இந்தியாவில் இருந்து அபுதாபிக்கு வருகை புரியும் பயணிகள் கட்டாயம் 12 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய எதிகாத் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: அபுதாபி அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை கமிட்டி வெளியிட்டுள்ள தனிமைப்படுத்துதலுக்கான விதிமுறைகள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பசுமை நாடுகளின் பட்டியலில் இடம்பெறாத இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அபுதாபிக்கு வருகை தரும் பயணிகளுக்கு புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், பசுமை நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள பகுதிகளில் இருந்து அபுதாபிக்கு வருகை புரியும் பயணிகள் அபுதாபி விமான நிலையத்திற்கு வந்ததும் கட்டாயம் பி.சி.ஆர். பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இந்தியாவில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான குடியிருப்பு விசா பெற்றவர்கள் அபுதாபி வருவதற்கு முன்பதிவு செய்து வருகின்றனர். இதில் அங்கிருந்து வரும் விமான பயணிகள் கட்டாயம் அமீரகத்தில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு இருக்க வேண்டும். அந்த தடுப்பூசி போட்டுக்கொண்டு குறைந்தது 14 நாட்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். இந்தியாவில் இருந்து அபுதாபிக்கு விமான பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் செய்யப்படுகிறது.

இதில் விமான நிலையத்தில் குடியேற்ற பிரிவு சோதனை நிறைவு பெற்றதும் அவர்களுக்கு மருத்துவத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட கைப்பட்டைகள் அணிவிக்கப்படுகிறது. அதன் பிறகு தங்களை அவர்கள் 12 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் 6-வது நாளில் ஒரு பி.சி.ஆர். பரிசோதனையும், பிறகு 11-வது நாளில் பி.சி.ஆர். பரிசோதனையும் எடுத்துக்கொள்வது கட்டாயமாகும்.

மேலும் துபாயில் குடியிருப்பு விசா பெற்றவர்கள் அபுதாபிக்கு வர தடையில்லை. முன்னதாக அந்தந்த பகுதிகளில் விசா பெற்றவர்கள் மட்டுமே குறிப்பிட்ட விமான நிலையங்களுக்கு வருகை புரிய அனுமதி வழங்கப்பட்டு இருந்தநிலையில், தற்போது சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் வழிகாட்டுதல்படி இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory