» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு, சம்பளம் கட்: பாகிஸ்தான் அரசு அதிரடி!

சனி 7, ஆகஸ்ட் 2021 11:43:16 AM (IST)



பாகிஸ்தானில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. 

பாகிஸ்தானில் இதுவரையில் 10 லட்சத்து 58 ஆயிரத்து 405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்து 54 ஆயிரத்து 711 பேர் மீண்டுள்ளனர். 23 ஆயிரத்து 702 பேர் மீள முடியாமல் இறந்துள்ளனர். இந்நிலையில் அங்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. அங்கு கூடுதலான எண்ணிக்கையில் தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு, முகாம்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்று பாகிஸ்தான் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிப்பு, அலுவலகம் வர அனுமதி மறுப்பு, சம்பளம் கிடையாது, ஓட்டல்கள்-வணிக வளாகங்களில் நுழைய அனுமதி ரத்து என அதிரடி நடவடிக்கைகளால் மக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.  தடுப்பூசி முகாம்களில் மணிக்கணக்கில் காத்து நின்று அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory