» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தடுப்பூசி பூஸ்டர் டோஸ்: உலக சுகாதார அமைப்பின் கோரிக்கையை ஜெர்மன், பிரான்ஸ் நிராகரிப்பு!

வியாழன் 5, ஆகஸ்ட் 2021 5:34:54 PM (IST)



தடுப்பூசி பூஸ்டர் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் வேண்டுகோளை ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிராகரித்துள்ளன.

கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகள் மற்றும் பணக்கார நாடுகள் தங்கள் மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்ட பின்னர் பூஸ்டர் டோசும் போட்டுவிட விரும்புகின்றன. ஆனால் இன்னும் பல ஏழை நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ்கூட போடாததை கருத்தில் கொண்டு பூஸ்டர் டோஸ் போடும் திட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால் இந்த கோரிக்கையை ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிராகரித்துள்ளன. செப்டம்பர் மாதம் முதல் முதியவர்கள் மற்றும் எளிதில் உடல்நிலை பாதிக்கக்கூடிய நபர்களுக்கு தடுப்பூசி  மூன்றாவது டோஸ் செலுத்த திட்டமிட்டுள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறுகிறார்.

செப்டம்பர் மாதம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத நோயாளிகள், முதியவர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு பூஸ்டர் டோஸ்களை செலுத்த ஜெர்மனி அரசு விரும்புவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை கூறி உள்ளது. பிரான்சில இதுவரை 64.5 சதவீத மக்களுக்கும், ஜெர்மனியில் 62 சதவீத மக்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிரான்சில் 49 சதவீதம் பேருக்கும், ஜெர்மனியில் 53 சதவீதம் பேருக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory