» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிங்கப்பூர் பள்ளியில் மாணவன் கோடாரியால் வெட்டி கொலை : சக மாணவன் வெறிச்செயல்

புதன் 21, ஜூலை 2021 11:30:37 AM (IST)சிங்கப்பூர் பள்ளியில் 13 வயது மாணவனை சக மாணவன் கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உலகிலேயே கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் குறைவாக நடக்கும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இந்த நிலையில் அங்கு உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவன் ஒருவன் சக மாணவனால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அந்த நாட்டை அதிர வைத்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்த பள்ளியில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, அங்குள்ள கழிவறையில் மாணவன் ஒருவன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு சக மாணவர்கள் அதிர்ந்து போயினர். இதுபற்றி அவர்கள் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவிக்க, அவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். 

மேலும் மாணவனின் உடலுக்கு அருகே கிடந்த ரத்தம் படிந்த கோடாரியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் கொலை செய்யப்பட்ட அந்த மாணவன் 13 வயது சிறுவன் என்பதும், அதே பள்ளியில் படிக்கும் 16 வயது சிறுவன் அவனை கோடாரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 16 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மாணவனின் இந்த வெறி செயலுக்கான காரணம் குறித்து போலீசார் அவனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory