» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தூதரை திரும்ப பெறும் ஆப்கானிஸ்தானின் முடிவு துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான் வருத்தம்!

செவ்வாய் 20, ஜூலை 2021 12:46:27 PM (IST)

தூதர் மற்றும் மூத்த தூதரக அதிகாரிகளை திரும்ப அழைக்கும் ஆப்கானிஸ்தான் அரசின் முடிவு துரதிர்ஷ்டவசமானது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் நஜிப் அலிகேலின் 27 வயது மகள் சில்சிலா அலிகேல் கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் இஸ்லாமாபாத்தில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடத்தல்காரர்களால் அடித்து சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட சில்சிலா அலிகேல் சில மணி நேரங்களுக்கு பின் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமாகியுள்ளது. 

இந்நிலையில் தூதரின் மகள் கடத்தப்பட்டு, சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானில் இருக்கும் ஆப்கானிஸ்தான் தூதர் மற்றும் மூத்த தூதரக அதிகாரிகள் அனைவரையும் திரும்ப அழைக்க ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அரசின் இந்த முடிவு துரதிர்ஷ்டவசமானது மற்றும் வருந்தத்தக்கது என பாகிஸ்தான் கூறியுள்ளது. மேலும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் ஆப்கானிஸ்தானை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம், தூதரகத்தின் தூதர் அவரது குடும்பத்தினர் மற்றும் தூதரக ஊழியர்களின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் தூதர் மற்றும் மூத்த தூதரக அதிகாரிகளை திரும்ப அழைக்கும் ஆப்கானிஸ்தான் அரசின் முடிவு துரதிர்ஷ்டவசமானது மற்றும் வருந்தத்தக்கது. ஆப்கானிஸ்தான் அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory