» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நேபாள நாட்டின் பிரதமராக காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் நியமனம்

செவ்வாய் 13, ஜூலை 2021 4:36:15 PM (IST)

நேபாள நாட்டின்  பிரதமராக காங்கிரஸ் தலைவர் ஷேர் பஹதூர் தியூபா இன்று காலை நியமிக்கப்பட்டார்.

நேபாள உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேரை கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் நேபாள காங்கிரஸ் தலைவர் நேபாளத்தில் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார் என்று நேபாள குடியரசுத் தலைவர் வித்தியா தேவி பண்டாரியின் தலைமைச் செயலாளர் அறிவித்தார். இந்த நியமன அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் அமைச்சரவைக்கு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான எதிர்க்கட்சி எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் துவங்கியது.

இந்தக் கூட்டுக் கூட்டத்தில் நேபாள மத்திய அமைச்சரவையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் அமைச்சர்களாக இடம் பெற போகிறவர்கள் யார் யார் என்று முடிவு செய்யப்படும் என நேபாள காங்கிரஸ் கொறடா அறிவித்தார் ஷேர் பஹதூர் தலைமையிலான அமைச்சரவை மிக சிறியதாக இருக்கும் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 ஆக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

நேபாள எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு மாலை 6 மணி அளவில் பிரதமர் சார்பாகவும் பிரதமராக பதவிப் பிரமாணம் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவி ஏற்ற பிறகு அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்ட விதி 76( 5 ) பிரதமராக நியமிக்கப்படுகிறார் .அவர் தனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை 30 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் எனவே சார்பாகவும் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் வரை சிக்கல் தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிகிறது.

உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யும் முன்னர் எதிர்க் கட்சிகள் கூட்டணி சார்பில் தனக்கு மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 275 பேரில் 149 பேரின் ஆதரவு இருப்பதாகவும் தன்னை அமைச்சரவை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று நேபாள குடியரசுத் தலைவரிடம் எதிர்க் கட்சிகள் கூட்டணி சார்பாக சார்பாக ஷேர்  பகதூர்  கேட்டுக் கொண்டார் ஆனால் அவரது கோரிக்கையை நேபாள குடியரசுத்தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை தனக்கு ஆதரவாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று சேர்ப்பதற்கு சமர்ப்பித்த பட்டியலில் உள்ள சில பெயர்களை சர்மா ஒளி தனக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார் 

அதனால் ஷேர் பகதூர் கோரிக்கையை ஏற்க முடியாது என்று வித்தியா தேவி பண்டாரி மறுத்துவிட்டார் .ஆனால் அதே கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம் நேபாள பிரதமராக நியமிக்க குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட்டது நேபாள அரசியல் அமைப்பு சட்டப்படி அரசியல் அமைப்புச் சட்ட விதி 76 (5)இந்திய பிரதமராக பொறுப்பேற்க உரிமை கூறுகிறது ஒரு மாத காலத்துக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் தரவேண்டும் அவர்கள் கோரிக்கையை நிராகரிக்க வேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்ட விதியை வித்யாதேவி பண்டாரி புறக்கணித்ததால் அவர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதாக கூறப்படுகிறதே இந்நிலையில் குடியரசு தலைவரும் பதவியில் நீடிக்க எந்த உரிமையும் இல்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து கூறுகின்றனர் வித்யாதேவி பண்டாரி குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகும் பட்சத்தில் அதுவும் பெரும் பிரச்சனையாக மாறும் என்று கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory