» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இத்தாலியில் ஜூன் 28 முதல் முகக்கவசம் கட்டாயம் இல்லை : சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

செவ்வாய் 22, ஜூன் 2021 5:26:28 PM (IST)

இத்தாலியில் ஜூன் 28 முதல் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமில்லை என அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இத்தாலியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் நாட்டில் கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  அந்த வரிசையில் ஜூன் 28ஆம் தேதி முதல் கரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் முகக்கவசங்களை அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான அறிவிப்பை அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதேசமயம் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஆஸ்டா பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு அரசின் இந்த தளர்வுகள் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் இதுவரை 42 லட்சத்து 53 ஆயிரத்து 460 பேர் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory