» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பொதுமக்கள் இனி முகக் கவசம் அணிய வேண்டாம் : பிரான்ஸ் அரசு அறிவிப்பு!

வியாழன் 17, ஜூன் 2021 3:38:32 PM (IST)



பிரான்ஸில் கரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பொதுமக்கள் இனி முகக் கவசம் அணியத் தேவையில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "பொதுவெளியில் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை. மேலும் சில நாட்களில் இரவு நேர ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யூரோ கால்பந்து போட்டிகள் நடந்துவரும் வேளையில் இரவு நேர ஊரடங்கு பிரான்ஸ் கால்பந்து ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்து வந்தது. இந்த நிலையில் பிரான்ஸ் அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. முன்னதாக, அமெரிக்கா, இஸ்ரேல், கனடா, தென்கொரியா போன்ற நாடுகள் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தால் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகள் அதிகப்படியாக கரோனா தடுப்பு மருந்துகளை வாங்கியுள்ளன. இவ்வாறு இருக்க, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் உள்ள ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் சென்றடையாத வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தடுப்பூசிகள் சென்றடைவதில் சமநிலையின்மை நிலவுவதாகப் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர். ஏழை நாடுகளுக்குப் பிற நாடுகள் கரோனா தடுப்பூசி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால்தான் செப்டம்பர் மாதத்திற்குள்ளாக 10% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த முடியும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory