» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்த தென் ஆப்பிரிக்க பெண்: உலக சாதனை படைத்தார்!!

புதன் 9, ஜூன் 2021 5:39:50 PM (IST)தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனை படைத்து உள்ளார்.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பெண் கோசியம் தாமாரா சித்தோல் (37) இவரது கணவர் டெபோஹோ சோட்டெட்சி.  கர்ப்பமாக இருந்த சித்தோல்  பிரிட்டோரியா மருத்துவமனையில் சிசேரியன் மூலம் இவர் குழந்தைகளை பெற்ரார். இவருக்கு 10 குழந்தைகள் உள்ளது. ஏழு ஆண் குழந்தைகளும்  மூன்று பெண் குழந்தைகளும் பிறந்து உள்ளது. 

தற்போது இந்த சாதனையை, மே மாதத்தில் மொராக்கோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்த மாலியைச் சேர்ந்த ஹலிமா சிஸ்ஸே வைத்திருக்கிறார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண், ஒரே கர்ப்பத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகக் கூறுகிறார். இந்த கூற்று மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டால், அது கின்னஸ் உலக சாதனையை மிகப் பெரிய பிறப்புக்கான சாதனையை முறியடிக்கும்.

இதுகுறித்து கின்னஸ் உலக சாதனை புத்தக செய்தித் தொடர்பாளர்  கூறும் போது சித்தோல் 10 குழந்தைகளை பெற்றெடுத்தார் என்ற செய்தியை கின்னஸ் உலக சாதனை அறிந்திருக்கிறது, மேலும் நாங்கள் எங்கள் வாழ்த்துக்களையும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை அனுப்பி உள்ளோம். தற்போதைய நேரத்தில், தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு  முன்னுரிமை அளிப்பதால்  இதை நாங்கள் இன்னும் சரிபார்க்கவில்லை. ஒரு சிறப்பு ஆலோசகருடன் எங்கள் குழு இதைப் பற்றி ஆய்வு செய்யும் என்று கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Black Forest Cakes

Thoothukudi Business Directory