» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஐ.நா. பொது பேரவை தலைவராக மாலத்தீவுகள் வெளியுறவு அமைச்சர் தேர்வு

செவ்வாய் 8, ஜூன் 2021 5:47:33 PM (IST)

ஐ.நா. பொது பேரவையின் 2021- 22 ஆம் ஆண்டுக்கான தலைவராக மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா சாகித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐ.நா. பொது பேரவையின் தலைவர் பதவிக்கு மாலத்தீவு வெளியுறவு அமைச்சரும் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ரசூலும் போட்டியிட்டனர். ஐநா பொது அவையில் உறுப்பினர்களாக உள்ள 191 நாடுகளில் 143 நாடுகள் மாலத்தீவு வெளியுறவு அமைச்சருக்கு ஆதரவாக வாக்களித்தனர் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் 48 வாக்குகள் பெற்றார்.

மாலத்தீவும் ஆப்கானிஸ்தானும் இந்தியாவின் நட்பு நாடுகள் ஆனாலும் கடந்த நவம்பர் மாதத்திலேயே மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் ஐக்கிய நாடுகள் சபையின் பொது பேரவை தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று அப்பொழுதே அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ரசூல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தான் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

இந்தச் சூழ்நிலையில் இந்தியா உடனடியாக ஆப்கானிஸ்தான் உடன் தொடர்பு கொண்டு முதலிலேயே வெளிப்படையாக மாலத்தீவுக்கு ஆதரவளிப்பதாக இந்தியா அறிவித்து விட்டது. அதனால் இப்பொழுது ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அரசுக்கு ஆதரவு அளிக்க இயலாது என்பதை தெரிவித்து விட்டது.

இந்தியாவின் பல்வேறு வெளியுறவு தூதரகங்கள், மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லாவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பாடுபட்டன .மாலத்தீவின் மகத்தான வெற்றிக்கு இந்திய தூதரகங்களில் முயற்சியும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.

இந்தியாவின் நிரந்தர உதவி பிரதிநிதியாக உள்ள நாகராஜ் நாயுடுவை பொதுப்பேரவை பொது தலைவரான அப்துல்லாவின் அலுவலக தலைமை அதிகாரியாக நியமிப்பது குறித்து மாலத்தீவும் இந்தியாவும் தற்பொழுது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்தியா ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இயங்கி வருகிறது 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்தியாவின் பதவி காலம் நீடிக்கும் அதே நேரத்தில் ஐநா பொது பேரவையின் 76வது தலைவராக மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் அவரது பதவிக் காலம் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். 

இந்த பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபையில் சபையின் பொது பேரவையில் தலைவராக மாலத்தீவும் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவும் இருப்பது இருநாடுகளின் வலுவைக் கூட்ட தக்க பல நடவடிக்கைகளுக்கு அடித்தளம் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் தேர்வு செய்யப்பட்டது குறித்து மாலத்தீவு ஜனாதிபதி, பிரதமர், இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory