» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா விவகாரத்தில் வெளிப்படையாகவே உள்ளது : அமெரிக்காவிற்கு சீனா பதில்

புதன் 26, மே 2021 7:23:10 PM (IST)

கரோனா தொற்று விவகாரத்தில் சீனா வெளிப்படையாகவே உள்ளதாக அந்நாட்டு அரசு அமெரிக்க அரசுக்கு பதிலளித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனத்தின் வூஹான் மாகாணத்தில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் தொற்று பரவல் தீவிரமடைந்ததால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. உலகம் முழுவதும் தொற்று பரவல் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து அமெரிக்கா சீன அரசை விமர்சிக்கத் தொடங்கியது. 

சீன அரசு திட்டமிட்டு கரோனா வைரஸை பரப்பியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்த நிலையில் சீனாவில் ஆய்வு மேற்கொண்ட உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழு அதனை மறுதலித்தது. இந்நிலையில் கரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் இருந்து தான் முதலில் பரப்பப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் சீன அரசை விசாரிக்க வேண்டும் என அமெரிக்கா சமீபத்தில் குற்றம்சாட்டியது. 

இதற்கு பதிலளித்துள்ள சீன அரசு அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தொடக்கம் முதல் சீனா வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருவதாகவும், தொடர்ச்சியாக சீனாவைக் குறிவைத்து தாக்கும் அமெரிக்காவையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory