» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவின் நிபந்தனைகளை ஏற்கவிட்டால் நடவடிக்கை: வாட்ஸ்அப்பிற்கு ஐ.டி., அமைச்சகம் நோட்டீஸ்

வியாழன் 20, மே 2021 11:52:11 AM (IST)

வாட்ஸ்அப் பயனர்களின் தகவல் பாதுகாப்பு தொடர்பாக ஏற்கனவே அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்த மத்திய ஐ.டி., அமைச்சகம், மே 25-க்குள் விளக்கமளிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 40 கோடிக்கும் மேல் ஆகும். அதில் 1.5 கோடி மக்கள் வாட்ஸ்அப்பின் வணிக கணக்கை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த ஜனவரி அன்று வாட்ஸ்அப் புதிய தனியுரிமை கொள்கையை அறிவித்தது. அதன் மூலம் தனிநபர் உரையாடல்களையும் பார்க்க முடியும் என்ற சர்ச்சை எழுந்தது. ஆனால், தாங்களே நினைத்தால் கூட வாட்ஸ்அப் செய்திகளை படிக்க முடியாது என நிறுவனம் விளக்கமளித்தது. 

வாட்ஸ்அப் வணிக கணக்குகள் மட்டுமே பேஸ்புக்கின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என்றது. மக்களின் எதிர்ப்பால் ஒத்திவைக்கப்பட்ட அதன் புதிய தனியுரிமை கொள்கைகள் மே 15 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இவற்றை ஏற்காவிட்டால் படிப்படியாக வாட்ஸ்அப்பின் செயல்பாடு நிறுத்திக்கொள்ளப்படும் என அறிவித்துள்ளனர். ஆனால் ஒருவரின் கணக்கு அப்படியே இருக்கும். புதிய கொள்கையை ஏற்றால் செயல்படும். இந்நிலையில் புதிய தனியுரிமை கொள்கைகளை திரும்பப்பெறும்படி வாட்ஸ்அப்பிடம் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அவர்கள் அனுப்பியுள்ள புதிய நோட்டீஸில், "பல இந்திய குடிமக்கள் அன்றாட வாழ்க்கையில் தொடர்புகொள்வதற்கு வாட்ஸ்அப்பை நம்பியிருக்கிறார்கள். நியாயமற்ற விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் இந்திய பயனர்கள் மீது சுமத்துவது சிக்கல் மட்டுமல்ல, பொறுப்பற்றத்தனம். குறிப்பாக ஐரோப்பிய பயனர்களுடன் ஒப்பிடுகையில், நிபந்தனைகள் இந்திய பயனர்களுக்கு எதிராக பாகுபாடாக உள்ளது.” என கூறியுள்ளது. மே 25-க்குள் நோட்டீஸுக்கு பதிலளிக்கவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

ஐரோப்பாவில் பயனர்கள் வாட்ஸ்அப்பின் நிபந்தனைகளை ஏற்க மறுத்தாலும் வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த அனுமதித்துள்ளனர். ஆனால் இந்தியாவில் நிபந்தனைகளை ஏற்க வேண்டும், இல்லை என்றால் செயலியை விட்டு வெளியேற வேண்டும் என்பதாக வடிவமைத்துள்ளனர். இதனை தற்போதும் அரசு கேள்வி கேட்டுள்ளது.


மக்கள் கருத்து

adminமே 20, 2021 - 12:26:41 PM | Posted IP 162.1*****

athellam ok. atha monitor pannanum. anga than iruku un thiramai

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory