» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஏழை நாடுகளுக்கு 8 கோடி டோஸ் தடுப்பு மருந்து: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

புதன் 19, மே 2021 12:13:09 PM (IST)

ஏழை நாடுகளுக்கு 8 கோடி டோஸ் தடுப்பு மருந்தை கோவாக்ஸ் திட்டத்தின் மூலம்  அளிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வரும் ஜூன் மாதம் பிரிட்டன் தலைமையேற்று நடத்தும் ஜி-7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றவுள்ளார். சர்வதேச அளவில் அனைத்து நாடுகளுக்கும் தடுப்பு மருந்து சென்று சேர உருவாக்கப்பட்ட கோவாக்ஸ் திட்டம் மூலமாக பல ஏழை நாடுகள் பயனடைகின்றன. இதுகுறித்து ஜி7 மாநாட்டில் ஜோ பைடன் உரையாற்ற திட்டமிட்டுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள ஜனநாயக கொள்கையை பின்பற்றும் நாடுகளுடன் இணைந்து இந்த திட்டத்தில் அமெரிக்கா ஈடுபடும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் கோவாக்ஸ் திட்டத்திற்கு அமெரிக்காவின் பங்களிப்பு குறித்து ஜி7 மாநாட்டில் அவர் அறிக்கை வெளியிட உள்ளார். உலக சுகாதார அமைப்பு பொதுநலன் கருதி இந்தத் திட்டத்தை உருவாக்கியது. இதில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் இணைந்துள்ளன. இந்த திட்டத்தின் மூலமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளுக்கு உதவ உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டிருந்தது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகளும் இந்த திட்டத்தில் தடுப்பு மருந்துகளை தயாரித்து இலவசமாக வழங்க சம்மதித்தன. தற்போது உலக அளவில் தடுப்பு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இத்திட்டத்தின் மூலம் சிறிய நாடுகள் பல பயன்பெறும். உலக சுகாதார அமைப்புடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்கா 8 கோடி டோஸ் தடுப்பு மருந்தை கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் ஏழை நாடுகளுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல தடுப்பு மருந்து நிறுவனங்களான பைசர், மடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து வரும் ஜூன் மாதத்திற்குள் 2 கோடி டோஸ் தடுப்பு மருந்தை தயாரித்து கோவாக்ஸ் திட்டத்திற்கு அளிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory