» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் கரோனா தொற்று அதிகரிப்பு : இரவு நேர ஊரடங்கு அமல்

திங்கள் 17, மே 2021 5:55:30 PM (IST)

இலங்கையில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹானா கூறுகையில்,  கரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.மேலும், நேற்று, கட்டுப்பாடுகளை மீறிய 262 பேர் கைது செய்யப்பட்டனர். அக்டோபர் 30 முதல் கட்டுப்பாடுகளை மீறியதற்காக 9,850 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், இன்றிரவு முதல் மே 31 வரை இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளைத் தவிர இரவு 11 மணி முதல் அடுத்த நாள்  அதிகாலை 4 மணி வரை போக்குவரத்து பயணம் தடை செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை தகவலின்படி, நேற்று ஒரே நாளில் 2,275 புதிய கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து மொத்தம் 1,42,746 பேர் இதுவரை  பாதிக்கப்பட்டுள்ளனர்.  இலங்கையில் ஒரேநாளில் 21 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், மொத்தம் 962 ஆக உயர்ந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory