» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா 3வது அலையை தடுக்க ஜூன் 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்: மலேசிய அரசு அறிவிப்பு

செவ்வாய் 11, மே 2021 4:23:28 PM (IST)

கரோனா வைரஸ் மூன்றாவது அலை அச்சம் காரணமாக வரும் ஜூன் 7ஆம் தேதி வரை தேசிய அளவில் முழு ஊரடங்கை அமல்படுத்த மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. 

மலேசியாவில் மொத்தம் 4,44,484 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 1,700 பேர் பலியாகியுள்ளனர். கடந்த திங்கள் அன்று புதிதாக 3,807 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது 37,390 பேர் கரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பரவல் கட்டுக்குள் இருந்த நிலையில் மீண்டும் நோய் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மூன்றாவது அலை அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேலும் உருமாற்றம் பெற்ற புதிய கரோனா வைரஸ்களும் வேகமாக பரவும் சூழல் உண்டாகியிருக்கிறது. இந்நிலையில் வரும் ஜூன் 7ஆம் தேதி வரை தேசிய அளவிலான முழு ஊரடங்கை அமல்படுத்தி மலேசிய பிரதமர் மொகிதீன் யாசின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியா கரோனா மூன்றாவது அலையை எதிர்கொண்டு வருகிறது.

இது தேசிய அளவில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. புதிய உருமாறிய கரோனா வைரஸ்களும் அதிகப்படியான தொற்று விகிதத்தை உண்டாக்கி வருகின்றன. இவை பொது சுகாதார கட்டமைப்பிற்கு கடும் சவாலை அளித்திருக்கிறது. எனவே முழு ஊரடங்கு மிகவும் அவசியமாக உள்ளது.

அதன்படி சமூக நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுகிறது. மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி. அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரம்ஜான் பண்டிகை வரவுள்ள நிலையில் முழு ஊரடங்கு இஸ்லாமியர்களுக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. மசூதிகளில் அதிகபட்சமாக 50 பேர் மட்டும் ஒரேசமயத்தில் தொழுகை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory