» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வெளிநாடு, உள்ளாட்டு விவகாரங்களில் சீனாவின் செயல்பாடுகள்: அமெரிக்கா அதிருப்தி

செவ்வாய் 4, மே 2021 9:03:40 AM (IST)

சீனா வெளிநாடுகளில் மிகவும் ஆக்ரோஷமாகவும் உள்நாட்டில் மிகவும் அடக்குமுறையுடனும் செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது

உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது. வர்த்தக போரில் தொடங்கிய பிரச்சினை படிப்படியாக வளர்ந்து மோதலாக உருவாகி நிற்கிறது. வர்த்தகம், கொரோனா வைரஸ் விவகாரம், உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள், ஹாங்காங் மற்றும் தைவான் மீதான ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது.

எனினும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் மோசமடைந்த உறவுகளை மேம்படுத்த ஜோ பைடன் தலைமையிலான புதிய நிர்வாகத்துக்கு சீனா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. இதனிடையே கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் முதல் முறையாக உரையாற்றிய அதிபர் ஜோ பைடன் சீனாவுடன் போட்டியிடுகிறோமே தவிர மோதலை விரும்பவில்லை என கூறினார்.

இந்த நிலையில் சீனா வெளிநாடுகளில் மிகவும் ஆக்ரோஷமாகவும் உள்நாட்டில் மிகவும் அடக்குமுறையுடனும் செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது சீனா குறித்து கூறியதாவது: அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இடையே கடந்த பிப்ரவரி மாதம் நடந்த முதல் தொலைபேசி உரையாடலின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேசினர்.

அப்போது சீனாவின் பல பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவுக்கு உண்மையான கவலைகள் இருப்பதை ஜோ பைடன் தெளிவுபடுத்தினார். சீனா அமெரிக்காவிடம் இருந்து நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் மதிப்புடைய வர்த்தக ரகசியங்கள் மற்றும் அறிவுசார் சொத்துகளை திருடி இருந்தாலும் அமெரிக்கா அந்த நாட்டை எதிரியாகக் கருதவில்லை. சீனாவை தடுத்து நிறுத்த அமெரிக்கா விரும்பவில்லை. அதே வேளையில் விதிகளை அடிப்படையாக கொண்ட சர்வதேச ஒழுங்கை குறை மதிப்புக்கு உட்படுத்த அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது.

சீனா நியாயமற்ற முறையில் மற்றும் பெருகிய முறையில் எதிர்மறையான வழிகளில் போட்டியிட முயற்சிக்கும் ஒருவரை போலவே செயல்படுகிறது. அதாவது பிற நாடுகளுடனான பிரச்சினையில் மிகவும் ஆக்ரோஷமாகவும், உள்நாட்டில் மிகவும் அடக்குமுறையுடனும் சீனா செயல்படுகிறது.‌ சீனாவின் இந்த போக்கு நிலைக்காது, வெற்றி பெறாது என்பதை சொல்ல எங்களைப்போல் ஒத்த எண்ணம் கொண்ட மற்றும் சீனாவால் பாதிக்கப்பட்ட பிற நாடுகளை ஒன்றாகக் கொண்டு வருகையில் நாங்கள் மிகவும், பயனுள்ளவர்களாக வலுவாகவும் இருக்கிறோம்.இவ்வாறு ஆண்டனி பிளிங்கன் கூறினார்.


மக்கள் கருத்து

adminமே 4, 2021 - 09:46:17 PM | Posted IP 46.16*****

nee un country ah mattum paaruda fool.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Thalir Products

Thoothukudi Business Directory