» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மத நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 44பேர் உயிரிழப்பு - 103 பேர் காயம்: இஸ்ரேலில் சோகம்!!

வெள்ளி 30, ஏப்ரல் 2021 5:10:03 PM (IST)இஸ்ரேலில் நடந்த யூத மத நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 44 பேர் உயிரிழந்தனர். 103பேர் படுகாயம் அடைந்தனர். 

இஸ்ரேல் நாட்டில் 2வது நூற்றாண்டில் வாழ்ந்த யூத மத துறவி ரபி சிமோன் பார் யோச்சாய்.  இவரது மறைவை நினைவுகூரும் வகையில் ‘லேக் போமர்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் மத நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிலும், இஸ்ரேலின் வடக்கே மவுண்ட் மெரான் பகுதியில் இதற்கான நிகழ்ச்சி நடந்தது.  இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.  இந்நிலையில், நிகழ்ச்சியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.  இதில் 28 பேர் சிக்கி பலியானார்கள்.  50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என முதற்கட்ட தகவல் வெளியானது.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன.  மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சபீத் பகுதியில் உள்ள ஜிவ் மருத்துவமனை மற்றும் நஹாரியா பகுதியில் உள்ள கலிலீ மருத்துவ மையம் ஆகியவற்றில் சேர்த்தனர்.  இந்நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்ந்து உள்ளது.  காயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 103 ஆக அதிகரித்து உள்ளது.  

அவர்களில் பலரது நிலைமை கவலைக்குரிய வகையிலேயே உள்ளது.  கூட்ட நெரிசலுக்கான காரணம் பற்றி எதுவும் தெரியவரவில்லை.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.எனினும், மலையில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை இருந்தனர் என்றும் ஒரு சிறிய பகுதியில் திரளான மக்கள் கூடியிருந்தனர் என்றும் கூறப்படுகிறது.  ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது மற்றொருவர் விழுந்ததில் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன என்றும் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products


Black Forest Cakes
Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory