» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் மழலையர் பள்ளியில் மர்ம நபர் கத்தியால் தாக்குதல் : 2 குழந்தைகள் பலி, 16 பேர் காயம்

வெள்ளி 30, ஏப்ரல் 2021 4:57:56 PM (IST)

சீனாவில், மழலையர் பள்ளி ஒன்றில் மர்ம நபர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில், 2 குழந்தைகள் உயிரிழந்தனர். ஆசிரியர்கள் உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர். 

சீனாவின் குவாங்சி ஜூவாங்க் மாகாணத்தின் பெய்லியூ என்ற நகரத்தில் உள்ள மழலையர் பள்ளிக்குள் நேற்று முன்தினம் திடீரென்று புகுந்த மர்ம நபர், அங்கிருந்த குழந்தைகள் ஆசிரியர்களை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். 2 ஆசிரியர்கள் உட்பட 16 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் குழந்தைகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அந்த 25 வயது நபரை கைது செய்தனர். அவர் மீது விசாரணை நடந்து வருகிறது. அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சீனாவில் இதுபோல் பள்ளிக் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம், அடிக்கடி நடந்து வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட அல்லது விரக்தியில் உள்ளவர்கள், இந்த தாக்குதல்களில் ஈடுபடுவதாக போலீசார் கூறுகின்றனர்.

மேலும் சீனாவில் துப்பாக்கிகள் வாங்க கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளதால் தாக்குதல் நடத்தும் நபர்கள் கத்தியை தங்கள் ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம்,சீனாவின் குன்மிங் நகரத்தில், 7 பேரை கத்தியால் குத்தி, ஒரு மாணவரை பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்த 56 வயது நபர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThalir Products

Black Forest Cakes

Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory