» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு முகக்கவசம் தேவையில்லை: அமெரிக்க அதிபர் அறிவிப்பு

புதன் 28, ஏப்ரல் 2021 12:14:22 PM (IST)

கரோனா தடுப்பூசிகளை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா வைரஸுக்கு எதிராகச் சிறந்த நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவாக நான் பெரிய அறிவிப்பை இன்று தெரிவிக்கிறேன். நீங்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தால் நீங்கள் பெரிய கூட்டத்தில் இல்லாத நேரத்தில் வெளியில் முகக்கவசம் அணியத் தேவையில்லை.

தடுப்பூசிகள் உங்கள் உயிரைக் காப்பற்றுவதுடன், உங்களைச் சுற்றியுள்ளவர்களைக் காப்பாற்றுகிறது. உங்கள் இயல்பான வாழ்க்கையை வாழ வழி செய்கிறது. உடனடியாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.

கடந்த ஆண்டு கரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த அமெரிக்காவில் இதுவரை 39% மக்கள் கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர். கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் கரோனா தொற்றும், இறப்பும் பெருமளவு குறைந்துள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில்தான் கரோனா தடுப்பு மருந்து அதிகம் செலுத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்துவதை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா தடுப்பூசிகளைச் செலுத்தலாம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir ProductsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory