» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜார்ஜ் ஃப்ளாய்டு கொலை வழக்கில் காவல்துறை அதிகாரி குற்றவாளி: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

புதன் 21, ஏப்ரல் 2021 10:23:12 AM (IST)

கறுப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாய்டு கொலை வழக்கில் காவல் அதிகாரி டெரக் சாவின் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த ஆண்டு மே மாதம், அமெரிக்காவில் கறுப்பின இளைஞரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலை செய்யப்பட்டார். பலரும் பார்க்கும் வண்ணம் காவலர்களாலேயே அந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டது. வெள்ளை இன காவல் அதிகாரியான டெரக் சாவில் ஃப்ளாய்டின் கழுத்தில் காலை வைத்து அழுத்திய காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. என்னால் மூச்சுவிட முடியவில்லை என ஃப்ளாய்ட் திணறிக் கொண்டு பேசியது உலகம் முழுவதும் ஒலித்தது. இனவெறிக் கொலை என தெள்ளத்தெளிவாகத் தென்பட்ட அந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

சரியாக 9 நிமிடங்கள் ஃப்ளாய்டின் கழுத்தில் தனது காலை வைத்து டெரக் சாவின் அழுத்தியது வீடியோவில் பதிவாகியிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் காவல் அதிகாரி டெரக் சாவின் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மின்னிபோலிஸ் நீதிமன்றம் இந்த பரபரப்புத் தீர்ப்பை வழங்கியது. மூன்று வாரங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 12 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏகமனதாக இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த அமர்வில் கறுப்பினம், வெள்ளையினம் எனக் கலவையாக நீதிபதிகள் அமர்த்தப்பட்டிருந்தனர்.

டெரக் சாவின் மீதான மூன்று குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தீர்ப்புக்காக வெளியே காத்திருந்த அனைவரும் வெற்றி, வெற்றி எனக் கோஷமிட்டனர். தீர்ப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தத் தீர்ப்பால் மாற்றங்கள் வரப்போவதில்லை ஆனால் கடவுளே நீதி கிடைத்திருக்கிறது. இது அனைவருக்கும் நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. டெரக் சாவின் மீதான மூன்று குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகியுள்ளது என்றார்.துணை அதிபர் கமலா ஹாரிஸ், இது அமெரிக்க வரலாற்றில் நீதி நிலைநிறுத்தப்பட்ட நாள் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தத் தீர்ப்பு தொடர்பாக ஜோ பைடன் நாட்டு மக்களுக்காக உரையாற்றினார்.


மக்கள் கருத்து

Apr 22, 2021 - 08:24:42 AM | Posted IP 108.1*****

நீதிமன்றம் குற்றவாளி என்று நிரூபிக்க 1 வருஷம் ஆகுது , நம் நாட்டில் நிரூபிக்க 15 முதல் 20 வருஷம் ஆகுமாம் .. இது தான் நீதிமன்றங்களின் தந்திரம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Thalir Products
Thoothukudi Business Directory