» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவுக்கு பயணம் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமெரிக்கா அறிவுறுத்தல்

செவ்வாய் 20, ஏப்ரல் 2021 5:27:08 PM (IST)

இந்தியாவிற்கு பயணம் செல்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இந்தியாவில் உருமாறிய புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் 2-வது அலை காட்டுத்தீ போல பரவி வருகிறது. கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் இந்திய பயணங்களுக்கு கெடுபிடிகளை விதித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம், இந்திய பயணத்தை தவிர்க்க வேண்டும் என பயணிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், "இந்தியாவில் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் பயணிகள் இந்தியாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். முழுமையாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் கூட புதிய வகை கரோனா தொற்றுக்கு ஆளாகும் மற்றும் பரப்பும் அபாயம் உள்ளது. எனவே, இந்திய பயணத்தை தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டி இருந்தால், பயணத்திற்கு முன்பாக முழுமையாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

samyApr 20, 2021 - 06:37:42 PM | Posted IP 185.1*****

ennapa solra. naa onsite polamnu irunthen

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Thalir Products


Black Forest CakesThoothukudi Business Directory