» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஏழைநாடுகளை சேர்ந்த 8 லட்சம் பேருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்குகிறது நியூசிலாந்து

வெள்ளி 16, ஏப்ரல் 2021 11:39:49 AM (IST)

ஐ.நா. உலக சுகாதார அமைப்பு திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில், நியூசிலாந்து அரசு ஏழைநாடுகளில் 8 லட்சம் பேருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்குகிறது.

உலகில் உள்ள ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்படுவதற்காக உலக சுகாதார அமைப்பு, ஐ.நா. அமைப்புகள் இணைந்து ஹவி தடுப்பூசி கூட்டமைப்பு என்ற பெயரில் அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளது. இந்த அமைப்பு மூலம் ஏழை நாடுகளில் உள்ள சுகாதாரப்பணியாளர்களுக்கும், கரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், வளர்ந்த நாடுகள் தங்களிடம் உள்ள கூடுதல் கரோனா தடுப்பூசிகளை ஏழைநாடுகளுக்கு வழங்க முன்வர வேண்டும் என ஐ.நா. , உலக சுகாதார அமைப்புகள் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஐ.நா., மற்றும் உலகசுகாதார அமைப்பு இணைந்து மேற்கொள்ளும் ஏழைநாடுகளுக்கு கரோனா தடுப்பூசி வழங்கும் ஹவி தடுப்பூசி அமைப்பிற்கு நியூசிலாந்து அரசு இலவசமாக தடுப்பூசி வழங்க உள்ளது. 

கோவாக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் ஏழைநாடுகளில் 8 லட்சம் பேருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்க உள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் நேற்று அறிவித்துள்ளார். நியூசிலாந்து பிரதமரின் அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir ProductsBlack Forest CakesNalam PasumaiyagamThoothukudi Business Directory