» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா அச்சுறுத்தல் எதிரொலி: பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணத்தில் மாற்றம்!

வியாழன் 15, ஏப்ரல் 2021 12:50:25 PM (IST)

இந்தியாவில் நிலவும் கரோனா சூழல் காரணமாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் இந்தியாவில் மேற்கொள்ளும் பயண நாள்கள் குறைக்கப்பட்டுள்ளன. 

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 26-ஆம் தேதி இந்தியா வரவுள்ளாா். அன்றைய தினம் முதல் அவா் இந்தியாவில் சில நாள்கள் தங்குவதற்கு திட்டமிடப்பட்டது. அப்போது இருநாடுகளுக்கு இடையிலான கூட்டு வா்த்தகம் மேம்படுத்தப்படுவதை இறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு அலுவல்களை அவா் மேற்கொள்வாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரின் செய்தித் தொடா்பாளா் லண்டனில் புதன்கிழமை கூறுகையில், இந்தியாவில் நிலவும் கரோனா சூழலை கவனத்தில்கொண்டு அந்நாட்டு அரசுடன் தொடா் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, அந்நாட்டில் மேற்கொள்ளவுள்ள பயண நாள்களைக் குறைப்பதற்கு போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளாா். அவா் தில்லிக்கு மட்டும் சென்றுவிட்டு நாடு திரும்புவாா். இந்த பயணத்தின்போது அவா் இந்திய பிரதமா் மோடி, அந்நாட்டின் வா்த்தக நிறுவன தலைவா்கள் உள்ளிட்டோரை சந்திப்பாா் என்று தெரிவித்தாா். பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam


Thalir Products


Black Forest Cakes
Thoothukudi Business Directory