» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தமிழ் புத்தாண்டு : பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து

புதன் 14, ஏப்ரல் 2021 10:22:39 AM (IST)

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் தமிழ் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சித்திரை 1ம் நாளான இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும் ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் நிறைக்க இந்த மகிழ்ச்சியான திருநாளில் பிரார்த்திக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதேபோல், அசாம் மக்கள் இன்று போஹக் பிஹூ கொண்டாடுவதால் அம்மாநில மக்களுக்கு அசாமீஸ் மொழியில் வாழ்த்து பதிவிட்டுள்ளார். ஒடியா மக்களுக்கு சங்க்ராந்தி வாழ்த்துகளும், கேரள மக்களுக்கு விஷு வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் ஜோ  பைடன் டுவிட்டரில் தெவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், தானும் தன் மனைவி ஜில்லும் சேர்ந்து "தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய மக்கள் வைசாகி, நவராத்ரி, சோங்ரான் உள்ளிட்ட விழாக்களை இந்த வாரத்தில் கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.அதேபோல் வங்காள மக்களுக்கும், கம்போடிய, லாவோஸ் மக்களுக்கும் நேபாள, சிங்கள மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கிறேன். தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். விஷு வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam
Black Forest Cakes

Thalir Products
Thoothukudi Business Directory