» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிங்கப்பூர் பிரதமர் இந்தியா வருகை: மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி!

புதன் 3, செப்டம்பர் 2025 5:20:16 PM (IST)



இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், 3 நாள் அரசு முறைப் பயணமாக, நேற்று (செப்.2) இந்தியா வந்தடைந்தார். இந்தப் பயணத்தில், பிரதமர் லாரன்ஸ் வாங்கின் மனைவி, சிங்கப்பூரின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் அவருடன் டெல்லி வந்துள்ளனர்.

டெல்லி ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், இன்று (செப்.3) மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். பிரதமர் வாங் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, நேற்று (செப்.2) நேரில் சந்தித்து பேசினார். அப்போது, இருநாடுகளுக்கு இடையிலான முதலீடு ஒத்துழைப்புகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், பிரதமர் நரேந்திர மோடியை அவர் நாளை (செப்.4) நேரில் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்தச் சந்திப்பில் இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

முன்னதாக, இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான ராஜாந்திர உறவுகள் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், பிரதமர் லாரன்ஸ் வாங்கின் இந்தப் பயணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory