» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தம்: பிசிசிஐ அறிவிப்பு!

வெள்ளி 9, மே 2025 3:25:42 PM (IST)



போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 

18-ஆவது ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச். 22ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் இறுதிப் போட்டி மே.25ஆம் தேதி நடைபெறவிருந்தது. இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தினால் போட்டிகளை காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டதாக பிசிசிஐ பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தகவல் அளித்துள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வாரத்திற்கு மட்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. பிசிசிஐ இது குறித்து கூறியதாவது: ஒரு வாரத்திற்கு ஐபிஎல் போட்டிகளை நிறுத்திவைக்கிறோம். இந்த முடிவினை ஐபிஎல் போட்டிகளை நிர்வகிக்கும் குழுவினர் எடுத்துள்ளனர்.

அனைத்து அணிகளின் பிரதிநிதிகள், வீரர்களின் நிலைமை, ஒளிபரப்பாளர்கள், விளம்பரதாரர்கள், ரசிகர்களின் நன்மைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பிசிசிஐ இந்திய ராணுவத்தினர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது.

இந்தச் சவாலான காலக்கட்டத்தில் பிசிசிஐ நாட்டிற்கு ஆதரவாக இருக்கிறது. இந்திய அரசாங்கம், ராணுவத்துடன் துணை நிற்கிறோம். ஆபரேஷன் சிந்தூரில் நாயகர்களாக இருக்கும் ராணுவத்தின் தைரியம், சுயநலமற்ற சேவைக்கு சல்யூட் எனக் குறிப்பிட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory