» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம்: தேர்தல் தோல்வி குறித்து கேஜரிவால் கருத்து

சனி 8, பிப்ரவரி 2025 9:16:15 PM (IST)

மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் என டெல்லி பேரவைத் தேர்தல் குறித்து ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், டெல்லிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. மக்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம். பொதுமக்களின் முடிவே முக்கியமானது, அதை நாங்கள் முழு மனதுடன் மதிக்கிறோம். இந்த வெற்றிக்காக பாஜகவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் அதிகாரத்திற்காக அரசியலில் ஈடுபடவில்லை. அரசியலை மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு வழிமுறையாக பார்க்கிறோம். ஆட்சியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, மக்களின் இன்பத்திலும், துன்பத்திலும், அவர்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளைச் செய்வோம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றுமென நம்புகிறேன். தேர்தல் முழுவதும் ஆம் ஆத்மி கட்சியினர் அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன் செயல்பட்டதற்காக கேஜரிவால் பாராட்டினார்.

இந்த தேர்தலில் மிகுந்த கடின உழைப்பு மற்றும் உறுதியுடன் போராடிய அனைத்து ஆம் ஆத்மி கட்சியினரையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். டெல்லி பேரவைத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. தேர்தலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை 3,182 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் பர்வேஷ் வெர்மா வீழ்த்தியுள்ளார்.

எனவே, டெல்லியில் பாஜக தலைமையிலான ஆட்சியில், பர்வேஷ் வெர்மா முதல்வராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி தேர்தலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தோல்வியடைந்திருப்பது, ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து

கந்தசாமிFeb 9, 2025 - 10:47:02 AM | Posted IP 162.1*****

கெஜ்ரிவால் ஆணவத்துக்கு விழந்த அடி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors




CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory