» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தாயை கொடூரமாக கொலை செய்து உடலை சமைத்து சாப்பிட்ட மகனுக்கு தூக்குதண்டனை!

வியாழன் 3, அக்டோபர் 2024 8:51:08 AM (IST)

தாயை கொடூரமாக கொலை செய்து உடலை சமைத்து சாப்பிட்ட மகனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது.

மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மகட்வாலா வாசகத் பகுதியை சேர்ந்தவர் எல்லம்மா(63). இவரது மகன் சுனில் ராமா(38). இவர் சம்பவத்தன்று தனது தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். எல்லம்மா பணம் தர மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுனில் ராமா, தாய் எல்லம்மாவை கொடூரமான முறையில் கொலை செய்தார். 

பின்னர் அவர் மிருகத்தை விட கொடூரமாக மாறி தாயின் உடலை வெட்டி, பாகங்களை சமைத்து சாப்பிட்டார். 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ந்தேதி மதியம் நடைபெற்ற இந்த நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனில் ராமாவை கைது செய்தனர்.

பின்னர் அவர் மீது கோலாப்பூர் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் செசன்ஸ் கோர்ட்டு 2021ம் ஆண்டு ஜூலை மாதம் தாயை கொலை செய்து உடலை சமைத்து சாப்பிட்ட சுனில் ராமாவுக்கு தூக்கு தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு கூறியது.

இந்த தண்டனையை எதிர்த்து சுனில் ராமா மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதேபோல மாநில அரசும் அவருக்கு வழங்கிய தண்டனையை உறுதி செய்ய ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரேவதி மோகிதே, பிரித்விராஜ் சவான் அடங்கிய அமர்வு முன் நடந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் சுனில் ராமாவுக்கு கோலாப்பூர் செசன்ஸ் கோர்ட்டு வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்தனர். இதுதொடர்பாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில், "சுனில் ராமாவுக்கு நாங்கள் மரண தண்டனையை உறுதி செய்கிறோம். குற்றவாளி தாயை கொலை மட்டும் செய்யவில்லை. அவரது உடல் உறுப்புகளான மூளை, கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றை அகற்றி, அவற்றை ஒரு பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு உள்ளார்.

மேலும் அவரது இருதயத்தை சமையல் செய்து சாப்பிட இருந்து உள்ளார். ஆகவே இது நரமாமிச வழக்கு. எனவே இதை அரிதிலும், அரிதான வழக்காக கூற முடியும். இந்த கொடூரமான கொலை சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. நரமாமிசம் சாப்பிட்டவர் திருந்த வாய்ப்பில்லை. இது ஒரு தாயின் மிக கொடூரமான கொலை" என கூறியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






CSC Computer Education


New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory