» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு ஹிந்து பெயர்: நெட்பிளிக்ஸிற்கு மத்திய அரசு சம்மன்!

திங்கள் 2, செப்டம்பர் 2024 5:07:08 PM (IST)



சர்ச்சையை கிளப்பிய IC 814 எனும் வெப் தொடர் குறித்து விளக்கமளிக்கக் கோரி நெட்பிளிக்ஸின் இந்திய தலைமை நிர்வாகிக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 1999ம் ஆண்டு நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து டில்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையத்திற்கு கடத்திச் சென்றனர். அங்கு விமானப் பயணிகளை பிணைக் கைதிகளாக வைத்துக் கொண்டு, இந்திய சிறையில் உள்ள மசூத் அசார் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்தனர். அதன்பேரில், 3 பயங்கரவாதிகளும் ஒப்படைக்கப்பட்ட பிறகு, விமானப் பயணிகளை விடுத்தனர்.

இந்த சம்பவத்தின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு, IC 814 எனும் வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், விஜய் வமர்மா, நஸ்ருதின் ஷா, பங்கஜ் கபூர், அரவிந்த் சாமி, அனுபம் திரிபாதி, தியா மிர்ஸா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களுக்கு ஹிந்துக்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி அமைப்பு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், ஹிந்து பெயரை எப்படி வைக்கலாம் என்று சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், IC 814 படத்திற்கு எதிராகவும், நெட்பிளிக்ஸுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக செப்.,3ம் தேதிக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நெட்பிளிக்ஸின் இந்திய உள்ளடக்க தலைவர் மோனிகா ஜெர்கில்லுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory