» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் : தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

செவ்வாய் 25, ஜூன் 2024 5:45:41 PM (IST)

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக, தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் உள்ள 156 பேரில் 96 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று(ஜூன் 25) கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக, தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory