» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சனாதனம் சர்ச்சை பேச்சு: அமைச்சர் உதயநிதிக்கு நிபந்தனை ஜாமீன்!

செவ்வாய் 25, ஜூன் 2024 12:20:28 PM (IST)

சனாதன விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் உதயநிதிக்கு, பெங்களூரு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல் ஒழிக்கவேண்டும் என்று பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு நாடு முழுவதும் பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. உதயநிதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி பெங்களூருவை சேர்ந்த பரமேஷ் பெங்களூருவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அமைச்சர் உதயநிதிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இன்று (ஜூன் 25) பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜரானார். அப்போது உதயநிதிக்கு ரூ.1 லட்சம் ரொக்க பிணையில், நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடியுடன் இளையராஜா சந்திப்பு

செவ்வாய் 18, மார்ச் 2025 5:33:56 PM (IST)

Sponsored Ads

New Shape Tailors



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory