» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாஜக கூட்டணியின் மக்களவைத் தலைவருக்கு ஆதரவு: ராகுல் நிபந்தனை!
செவ்வாய் 25, ஜூன் 2024 11:38:20 AM (IST)
மக்களவைத் துணைத் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு அளித்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மக்களவைத் தலைவருக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்துக்கு வருகைதந்த ராகுல் காந்தி, பாஜகவின் மக்களவைத் தலைவர் வேட்பாளருக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளிப்பதாக கோரியுள்ளார். மேலும், மக்களவைத் துணைத் தலைவர் பதவியை ராஜ்நாத் சிங்கிடம் கார்கே கேட்டிருந்தார். அதற்கு மீண்டும் அழைப்பதாக கூறிய ராஜ்நாத் இன்னும் அழைக்கவில்லை. எதிர்க்கட்சிகளிடம் பிரதமர் மோடி ஒத்துழைப்பு கேட்கிறார், ஆனால் எங்கள் தலைவர் அவமானப்படுத்தப்படுகிறார் என்று ராகுல் தெரிவித்தார்.
மத்தியில் தனிப் பெரும்பான்மை பெறாததால், பாஜக தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் மக்களவைத் தலைவராக பாஜக எம்பி ஓம் பிர்லாவை தேர்வு செய்ய பாஜக முனைப்பு காட்டி வரும் நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனர்.
ஆனால், மக்களவைத் துணைத் தலைவர் பதவியை தங்களுக்கு ஒதுக்குமாறு தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்தியா கூட்டணியும் மக்களவைத் தலைவருக்கு ஆதரவு அளிப்பதாக கூறியதுடன், துணைத் தலைவர் பதவியை கோரியுள்ளது. இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் மக்களவைத் தலைவர் பதவிக்கு ஓம் பிர்லா விண்ணப்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செந்தில் பாலாஜியின் ஜாமீன் ரத்து செய்யக் கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்!
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:23:10 PM (IST)

எல்லையில் 4-வது நாளாக பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி
திங்கள் 28, ஏப்ரல் 2025 12:24:46 PM (IST)

முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை உறுதி!
திங்கள் 28, ஏப்ரல் 2025 11:28:08 AM (IST)

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்: ரேவந்த் ரெட்டி வலியுறுத்தல்
சனி 26, ஏப்ரல் 2025 10:24:37 AM (IST)

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:25:39 PM (IST)

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சண்டை!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:26:16 AM (IST)
