» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மாமியாரை 95 முறை கத்தியால் குத்திக் கொலை இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

புதன் 12, ஜூன் 2024 5:34:51 PM (IST)

மத்தியப் பிரதேசத்தில் மாமியாரை 95 முறைக்கு மேல் கத்தியால் குத்திக் கொலை செய்த இளம்பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள அத்ரைலா என்ற கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான சரோஜ் கோல் என்பவரை, 24 வயது மருமகள் காஞ்சன் 95 முறைக்கு மேல் கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் கடந்த 2022ல் அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்றபோது மாமியாரும், மருமகளும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். 

இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக மருமகள் சரமாரியாக மாமியாரை குத்தியுள்ளார். அவர் மகன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததோடு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்து கைது காஞ்சன் கைது செய்யப்பட்டார். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை ரேவா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி காஞ்சனுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். சரோஜ் கோலின் கணவர் வால்மிக் கோலும், மருமகளைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கில் இணை குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டார். ஆனால் ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital


Thoothukudi Business Directory