» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரளத்தில் கனமழையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 12:49:40 PM (IST)
கேரளத்தில் கனமழை பெய்து வருவதையடுத்து கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. இதன் காரணமாக கோட்டயம், வைக்கம் ற்றும் சங்கனாச்சேரி ஆகிய தாலுக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
ஆலப்புழாவில் நிவாரண முகாம்கள் இயங்கி வருவதால் சேர்தலா மற்றும் செங்கனூர் தாலுக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி)கணித்துள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை வெளியிட்டது. மாநிலத்தில் கடந்த 3-4 நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து, தண்ணீர் தேங்கியது , சுவர்கள் இடிந்து விழும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் உள்ள சிறிய குக்கிராமமான எடத்துவாவில் பெய்த கனமழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இடைவிடாது பெய்து வரும் மழையினால் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக எப்போதுமே வாக்குறுதிகளை நிறைவேற்றாது: மம்தா பானர்ஜி தாக்கு!
திங்கள் 11, டிசம்பர் 2023 5:27:45 PM (IST)

தேசபக்தி அலையை மக்களிடம் தட்டி எழுப்பியவர் பாரதி : அமித் ஷா புகழஞ்சலி!
திங்கள் 11, டிசம்பர் 2023 12:41:54 PM (IST)
_1702278301.jpg)
ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 11, டிசம்பர் 2023 12:35:05 PM (IST)

சில கட்சிகளுக்கு மக்கள் மனங்களை வெல்ல தெரியவில்லை: பிரதமர் மோடி
சனி 9, டிசம்பர் 2023 4:52:23 PM (IST)

ஆதித்யா தொலைநோக்கி எடுத்த சூரியனின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ!
சனி 9, டிசம்பர் 2023 11:51:58 AM (IST)

புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2500 வெள்ள : முதல்வர் அறிவிப்பு!
சனி 9, டிசம்பர் 2023 10:47:05 AM (IST)
