» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது ஏன்? - நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல்

சனி 30, செப்டம்பர் 2023 5:28:55 PM (IST)

அதிமுக - பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மேலிடத்திற்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக - பாஜக இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. இனி பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்றே அதிமுகவினர் கூறி வருகின்றனர். 

ஆனால், அதிமுகவுடன் இன்னும் பேச்சுவார்த்தையில் இருப்பதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது குறித்து பாஜக தலைமை கூறியதற்கு இணங்க, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.  அதிமுக கூட்டணி முறிவு குறித்து தமிழக பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு அறிக்கை தயார் செய்துள்ளார். 

கூட்டணி முறிவு ஏன் ஏற்பட்டது? அதிமுக பிரிந்து செல்வதினால் பாஜகவுக்கு இழப்பு ஏற்படுமா? அதிமுக இன்றி வலுவான கூட்டணி அமையுமா? உள்ளிட்டவை குறித்து அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அறிக்கையை பாஜக தலைமையிடம் நிர்மலா சீதாராமன் இன்று சமர்ப்பித்துள்ளார். 

ஏற்கெனவே அதிமுக கூட்டணி முறிவு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசுவதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நாளை (அக்.1) தில்லி செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory