» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கர்நாடகாவில் நாளை பந்த்: பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை!
வியாழன் 28, செப்டம்பர் 2023 4:34:10 PM (IST)
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் திறப்பு உத்தரவை கண்டித்து நாளை கர்நாடகம் முழுவதும் பந்த் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும்பொருட்டு இன்று நள்ளிரவு முதல் நாளை(செப்.29) நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதைக் கண்டித்து ஊரடங்கு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளனர். விவசாய சங்கத்தினரும் பந்த் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.