» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தி திணிப்பை நிறுத்துங்கள்: மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!

வெள்ளி 15, செப்டம்பர் 2023 12:34:12 PM (IST)

இந்தி மொழி குறித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்

இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "இந்தியா, பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடாக இருந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய இந்த ஜனநாயக நாட்டில் மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒருங்கிணைக்கிறது. நாட்டின் அனைத்து மொழிகளையும் வலுப்படுத்தினால் மட்டுமே வலிமையான நாடு உருவாகும். 

இந்தி ஒருபோதும் மற்ற இந்திய மொழிகளுடன் போட்டி போடவில்லை. விடுதலை போராட்டத்தின் கடினமான காலங்களில் நாட்டை ஒருங்கிணைக்க இந்தி மொழி மிகப்பெரிய பங்காற்றி உள்ளது. பல மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளைக் கொண்ட இந்தியாவில் ஒற்றுமை உணர்வைத் தூண்டியது" என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் (டுவிட்டர்) சமூக வளைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் 'நீங்கள் இந்தி பேசுகிறீர்கள், ஏனென்றால் அது உங்களுக்குத் தெரிந்த ஒரே மொழி, உங்களுக்குத் தெரிந்த ஒரே மொழி என்பதால், நாம் இருவரும் ஒன்றா?" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த பதிவில் அவர் 'இந்தி திணிப்பை நிறுத்துங்கள்' என்றும் தெரிவித்திருந்தார். நடிகர் பிரகாஷ் ராஜ்-ன் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.


மக்கள் கருத்து

தமிழர்கள்Sep 17, 2023 - 01:14:52 PM | Posted IP 172.7*****

சாத்தான் வேதம் ஓதுகிறது....இந்த கூத்தாடிகள் இந்தி படத்தில் நடிப்பார்கள் ஆனால் இந்தி திணிப்பு என்று நாடகம் ஆடி மக்களை திசை திருப்புவார்கள்....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory