» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை ஒட்டி ரூ. 75 நாணயம் அறிமுகம்
வெள்ளி 26, மே 2023 10:58:26 AM (IST)
புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை ஒட்டி ரூ. 75 நாணயம் அறிமுகம் செய்ய இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை ஒட்டி ரூ. 75 நாணயம் புழக்கத்திற்கு விடப்படுவதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. புதிய நாணயத்தின் ஒருபுறம் அசோகா சின்னமும், அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையும் இடம்பெறுகிறது. இடதுபுறத்தில் பாரத் என்ற வார்த்தை தேவனகிரியிலும், இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலத்தில் வலதுபுறமாக இடம்பெறுகிறது.
இத்துடன் இந்திய ரூபாய் சின்னம் மற்றும் 75 என்ற எண் அசோகா சின்னத்தின் கீழ் இடம்பெறுகிறது. நாணயத்தின் மற்றொரு புறத்தில் பாராளுமன்ற கட்டிடத்தின் படம் இடம்பெறுகிறது. சன்சத் சங்குல் என்ற வார்த்தை தேவனகிரியிலும், நாடாளுமன்ற வளாகம் என்ற வார்த்தையும் நாணயத்தில் பொறிக்கப்படுகிறது.
இந்த நாணயம் வட்ட வடிவத்தில், 44 மில்லிமீட்டர் சுற்றளவு, நாணயத்தை சுற்றி 200 பற்கள் அடங்கிய டிசைன் வழங்கப்படுகிறது. 35 கிராம் எடை கொண்டிருக்கும் புதிய நாணயம் four-part அலாய் மூலம் உருவாக்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் சில்வர், 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் ஜின்க் இடம்பெற்று இருக்கும்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார். திறப்பு விழாவில் ஆளும் கட்சிக்கு ஆதரவான 25 கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்து உள்ளன. மறுபுறம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறக்க எதிர்ப்பு தெரிவித்து 20 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்குவேன்: பிரஜ் பூஷண்
புதன் 31, மே 2023 3:56:37 PM (IST)

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம்: டி.கே.சிவக்குமார் வது உறுதி!!
புதன் 31, மே 2023 10:48:39 AM (IST)

மல்யுத்த வீராங்கனைகளின் பதக்கங்களை கங்கையில் வீசும் திட்டம் நிறுத்திவைப்பு
புதன் 31, மே 2023 10:24:44 AM (IST)

இந்திய பணத்தின் நேர்மையில் சந்தேகம் : ப.சிதம்பரம் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
செவ்வாய் 30, மே 2023 5:15:03 PM (IST)

மணிஷ் சிசோடியா ஜாமின் மனு தள்ளுபடி : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 30, மே 2023 12:48:55 PM (IST)

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி; 30 பேர் காயம்!
செவ்வாய் 30, மே 2023 11:23:36 AM (IST)
