» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல்: அமித்ஷா தகவல்

புதன் 24, மே 2023 4:26:21 PM (IST)



டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோலை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளது. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை இணைக்க பாராளுமன்றத்தில் செங்கோல் பொருத்தப்பட வேண்டியது அவசியம்.

8ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட சோழர் கால செங்கோலை பிரதமர் மோடி நிறுவுகிறார். பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள மக்களவை சபாநாயகரின் இருக்கைக்கு அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது. பாராளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் நாடு சுதந்திரம் அடைந்தபோது முன்னாள் பிரதமர் நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியது. அந்த செங்கோலை புதிய பாராளுமன்ற திறப்பு விழாவின்போது பிரதமரிடம் ஆதீனங்கள் ஒப்படைக்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads











Thoothukudi Business Directory