» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஏப்ரல் மாதத்தில் 15 விடுமுறை நாட்கள் : ஆர்பிஐ அறிவிப்பு - முழு பட்டியல்
வியாழன் 30, மார்ச் 2023 3:53:24 PM (IST)
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் ஏப்ரல் 2023-ஆம் ஆண்டை பொறுத்தவரை 15 நாட்கள் விடுமுறை விடப்படும் என்று அறிவித்துள்ளது.
குறிப்பாக அடுத்த மாதம் புனித வெள்ளி, ஈத் திருநாள், அம்பேத்கர் பிறந்த நாள் என்று பல விடுமுறை நாட்கள் வருவதால் ஏப்ரல் மாதம் 15 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1, 2023 (சனிக்கிழமை): வங்கிக் கணக்கின் வருடாந்திர மூடல்
ஏப்ரல் 2, 2023 (ஞாயிறு): விடுமுறை
ஏப்ரல் 4, 2023 (செவ்வாய்) – மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 5, 2023 (புதன்கிழமை) – பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்தநாள்
ஏப்ரல் 7, 2023 (வெள்ளிக்கிழமை) – புனித வெள்ளி
ஏப்ரல் 8, 2023 (சனிக்கிழமை) – மாதத்தின் 2வது சனிக்கிழமை
ஏப்ரல் 9, 2023 (ஞாயிறு) – விடுமுறை
ஏப்ரல் 14, 2023 (வெள்ளிக்கிழமை) – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி / போஹாக் பிஹு / சீராபா / பைசாகி / தமிழ் புத்தாண்டு தினம் / மஹா பிசுபா சங்கராந்தி / பிஜூ விழா / பிசு விழா
ஏப்ரல் 15, 2023 (சனிக்கிழமை) – விஷு / போஹாக் பிஹு / ஹிமாச்சல் தினம் / பெங்காலி புத்தாண்டு தினம்
ஏப்ரல் 16, 2023 (ஞாயிறு) – விடுமுறை
ஏப்ரல் 18, 2023 (செவ்வாய்) – ஷப்-இ-கத்ர்
ஏப்ரல் 21, 2023 (வெள்ளிக்கிழமை) – ரம்ஜான்
ஏப்ரல் 22, 2023 (சனிக்கிழமை) – மாதத்தின் 4-வது சனிக்கிழமை
ஏப்ரல் 23, 2023 (ஞாயிறு) – விடுமுறை
ஏப்ரல் 30, 2023 (ஞாயிறு) – விடுமுறை.
ஏப்ரல் மாதத்தில் வங்கிகள் 15 நாட்களுக்கு மூடப்பட்டிருந்தாலும், ஆன்லைன் இணைய வங்கி சேவைகள் வழக்கம் போல் செயல்படும். வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்து பணத்தை டெபாசிட் செய்யவோ எடுக்கவோ முடியாது என்றாலும், மற்ற இணைய சேவைகளை எந்த சிரமமும் இன்றி பெற முடியும். விடுமுறை காலத்தில் நெட் பேங்கிங் மற்றும் பிற ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்து கொள்ளலாம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்குவேன்: பிரஜ் பூஷண்
புதன் 31, மே 2023 3:56:37 PM (IST)

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம்: டி.கே.சிவக்குமார் வது உறுதி!!
புதன் 31, மே 2023 10:48:39 AM (IST)

மல்யுத்த வீராங்கனைகளின் பதக்கங்களை கங்கையில் வீசும் திட்டம் நிறுத்திவைப்பு
புதன் 31, மே 2023 10:24:44 AM (IST)

மணிஷ் சிசோடியா ஜாமின் மனு தள்ளுபடி : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 30, மே 2023 12:48:55 PM (IST)

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி; 30 பேர் காயம்!
செவ்வாய் 30, மே 2023 11:23:36 AM (IST)

ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 8 தொழிலாளர்கள் பலி!
திங்கள் 29, மே 2023 9:01:30 PM (IST)
