» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
திருப்பதி கோவில் வங்கி டெபாசிட் தொகை ரூ.15,938 கோடியாக அதிகரிப்பு
செவ்வாய் 24, ஜனவரி 2023 3:44:04 PM (IST)
திருப்பதி கோவில் தேவஸ்தான வங்கி டெபாசிட் ரூ.15,938 கோடியாகவும், தங்கம் வைப்புத்தொகை 10,258 கிலோவாகவும் அதிகரித்துள்ளது.

பக்தர்கள் டெபாசிட் செய்யும் லக்கேஜ்களை பாதுகாப்பாக சேமித்து ஒப்படைக்கும் வகையில், விமான நிலையங்கள் போன்று அதிநவீன அமைப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஆர்எப்ஐடி குறிச்சொற்கள் பயன்படுத்தப்படும். இதற்கான சிறப்பு மென்பொருள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த முறை நிகழ் ஆண்டு ஏப்ரல் இறுதிக்குள் அமல்படுத்தப்படும்.
நாடு முழுவதும் 396 தேவஸ்தான கல்யாண மண்டபங்கள் உள்ளது. பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இவற்றில் 12 கல்யாண மண்டபங்கள் ரூ.2.8 கோடியில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, ஏசி உள்ளிட்ட வசதிகள் செய்து வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 384 கல்யாண மண்டபங்களின் வாடகை உயர்த்தப்படவில்லை.
டாடா நிறுவனம் வழங்கும் ரூ.150 கோடி நன்கொடையில் திருமலையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும். அது டிசம்பருக்குள் கட்டி முடிக்கப்படும். தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக சுமார் 7,126 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் 960 சொத்துகள் மீது வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதேபோல், 2019-ஆம் ஆண்டில் ரூ.13,025 கோடியாக இருந்த தேவஸ்தான வங்கி டெபாசிட் தற்போது ரூ.15,938 கோடியாகவும், தங்கம் வைப்புத்தொகை 7,339 கிலோவிலிருந்து 10,258 கிலோவாகவும் அதிகரித்துள்ளது. தேவஸ்தான நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மை மற்றும் அர்ப்பணிப்பை அனைவரும் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
பல பள்ளிகள், கல்லூரிகள், காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளிகள், ஊனமுற்றோர் பாலிடெக்னிக், ஏழை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் பிற சிறப்பு நிறு வனங்கள் நடத்தப்படுவதைத் தவிர, திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல சமூக நலன் செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது.
டிசம்பர் மாதத்துக்குள் உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்படும். அனுமன் பிறந்த இடமான அஞ்சனாத்திரியில் ரூ.50 கோடியில் மேம்பாட்டு பணிகள் மற்றும் திருமலையில் புதிய பரகாமணி கட்டடம் ரூ.23 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது : பட்ஜெட் தாக்கல் செய்து நிதியமைச்சர் உரை!
புதன் 1, பிப்ரவரி 2023 11:21:07 AM (IST)

பாலியல் பலாத்கார வழக்கில் ஆசரம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 31, ஜனவரி 2023 5:08:58 PM (IST)

ஆந்திராவின் தலைநகர் விசாகப்பட்டினம் : முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 31, ஜனவரி 2023 3:44:25 PM (IST)

திருவள்ளுவர், ஆதிசங்கரர் வழியில் இந்தியா செயல்பட்டு வருகிறது : குடியரசு தலைவர்
செவ்வாய் 31, ஜனவரி 2023 11:48:12 AM (IST)

பாஜகவுடன் கூட்டணி அமைப்பதைவிட மரணம் மேலானது: நிதீஷ் குமாா் பேட்டி!
செவ்வாய் 31, ஜனவரி 2023 11:35:45 AM (IST)

இந்தியாவின் மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே யாத்திரையின் நோக்கம் - ராகுல்காந்தி
திங்கள் 30, ஜனவரி 2023 5:18:14 PM (IST)
